கொரோனா: தமிழ்நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரம்

மலேசியா, சிங்கப்பூர், துபாய் ஆகிய நாடுகளிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்தவர்களில் 11 மாத குழந்தை உட்பட மூன்று பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதால் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவையைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ஜப்பான் டோக்கியாவிலிருந்து கோவை திரும்பியுள்ளார். அவருக்கும் தொடர்ந்து காய்ச்சல், தொண்டை வலி இருப்பதால் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.